செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (22:18 IST)

தமிழகத்தில் ஆட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது: தமிழிசை

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலையால் பாஜகவிற்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அக்கட்சி படுதோல்வி அடைந்து ஒரே ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அக்கட்சி தமிழகத்தில் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றதாக தெரியவில்லை. மாறாக அக்கட்சியின் மேல் அதிருப்திதான் மேலும் அதிகரித்துள்ளது.

இன்னும் நோட்டாவையே தாண்டாமல் இருக்கும் நிலையில் பாஜகவை ஆட்சியில் அரங்கேற்றியே தீருவேன் என்று பாஜகவினர் சூளுரைப்பது நகைப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, '22 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள மோடி ஆட்சியை அகற்ற முடியாது என்றும், அதேபோல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது என்றும் ஆவேசமாக கூறினார்

மேலும் இந்தியாவின் முக்கால்வாசி பகுதியில் காவி பரவி விட்டதாகவும் வெகுவிரைவில் தமிழகத்திலும் கண்டிப்பாக காவி மலரும் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இந்திய பொருளாதாரம் செம்மை அடைந்ததுள்ளதாகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும், பேட்டரி கார்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.