வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (20:35 IST)

எஸ்.வி.சேகர் சொன்னதை காமெடியாக எடுத்து கொள்ளுங்கள்: தமிழிசை

தமிழக பாஜக தலைவர் பதவி கொடுத்தால் பாஜகவுக்கு தற்போது இருக்கும் வாக்கு சதவிகிதத்தை விட அதிக வாக்கு சதவீதம் பெற்று கொடுக்க தன்னால் முடியும் என்றும், தன்னை பாஜக பயன்படுத்தி கொண்டால், பாஜகவுக்குத்தான் லாபம் என்றும், பயன்படுத்தவில்லை என்றால் எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்றும் சமீபத்தில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'பாஜக தலைவர் பதவி என்றால் அவ்வளவு இலகுவான பதவியா? எஸ்.வி.சேகர் நிறைய காமெடி நாடகங்களில் நடித்துக் கொண்டிருப்பவர். அதனால்தான் இப்படி காமெடியாக பேசிக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், காமெடியை நினைத்து சிரித்துவிட்டுப் போயிவிடவேண்டும். அவ்வளவுதான் என்று கூறினார்.

இந்த நிலையில் பாஜக வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி வரும் பாராளுமன்ற தேர்தல் வரை தமிழக பாஜக தலைவரை மாற்றும் எண்ணம் அக்கட்சியின் தேசிய தலைமைக்கு இல்லை என்றே கூறப்படுகிறது.