செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (12:57 IST)

சிங்காரவேலர் 165-ஆவது பிறந்தநாள்..! சமதர்மமும் சமூகமும் வளர பாடுபடுவோம்! முதல்வர் ஸ்டாலின்..!

stalin cm
சிங்காரவேலரின் 165-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165-ஆவது பிறந்தநாள் இன்று என குறிப்பிட்டுள்ளார்.
 
ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
இதனிடையே சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு  தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.