கொலை மிரட்டல் விடுக்கும் செந்தில் பாலாஜி பயந்துவிட்டார்….அண்ணாமலை
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்-2021 வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, திமுக சார்பில் வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டல் விடுப்பதுபோல் பேசி மிதித்துவிடுவதாக எச்சரித்தார்.
இதற்கு கனிமொழி நீ செந்தில்பாலாஜி மேல கை வைச்சுப்பாரு தம்பி எனப் பரப்புரை மேற்கொண்ட அவர் பேச்சும் சர்ச்சை ஆனது.
இநநிலையில் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுத்த அண்ணாமலை மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இன்று பரப்புரை செய்த அண்ணாமலை, பல பேருக்கு கொலை மிரட்டம் விடுக்கும் செந்தில் பாலாஜி நான் கொலைமிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளதால் அவர் பயந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.