தொடர்புடைய செய்திகள்
- ஆ ராசா பிரச்சாரம் செய்ய தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு
- அமித்ஷாவின் வாகன பிரச்சாரத்தை பார்க்க வந்த பெண் வாய்க்காலில் விழுந்து பரிதாபம்!
- தமிழகம் மற்றும் புதுவையில் அமித்ஷா இன்று பிரச்சாரம்
- கமல்ஹாசனுக்காக பிரச்சாரம் செய்யும் ஒரே ஒரு பிக்பாஸ் பிரபலம் இவர்தான்!
- கடைசி நாளில் 2 மணி நேரம் கூடுதலாக பிரச்சாரம் செய்ய அனுமதி: தேர்தல் ஆணையம்
எனக்கு இன்னொரு முகம் இருக்கு, அது கர்நாடக முகம்: அண்ணாமலை ஆவேசம்
எனக்கு இன்னொரு முகம் இருக்குது என்றும் அது கர்நாடக முகம் என்றும் அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கின்றேன் என்றும் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவர் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் செய்த பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செந்தில்பாலாஜி எல்லாம் ஒரு ஆளா? அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன். நான் ஐபிஎஸ் பதவியில் இருந்த காலத்தில் உன்னைப் போல் எத்தனையோ பிராடுகளை பார்த்து இருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கின்றேன்
நான் வன்முறை இல்லாமல் நியாயமான அரசியல் செய்ய வந்துள்ளேன். என் மீது வன்முறையை திணித்து, நான் வன்முறை செய்ததாக மாற்ற வேண்டாம். நான் போராடுவது எல்லாம் மக்களான உங்களுக்காக தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். திமுகவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அண்ணாமலை பேசிய இந்த பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்
