திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 31 மார்ச் 2021 (08:41 IST)

எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு... ஜோதிமணிக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, ஜோதிமணியின் பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட  பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்களில் மோடியின் ஆசிபெற்ற சின்னம், ஜெயலலிதாவின் ஆசி பெற்ற சின்னம் தாமரை என சுவர் விளம்பரங்கள் செய்திருந்தனர். இதனை ஜோதிமணி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் தங்கள் பிரசுரங்களில் நரேந்திர மோடியின் புகைப்படத்தை போடவே அச்சப்படுகின்றனர். 
 
இது குறித்து அண்ணாமலை, தொகுதியில் ஒரு சில இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எங்களது சுவர் விளம்பரங்களில் மோடி பெயரை அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட வேண்டாம் எதற்கும் ஒரு எல்லை உண்டு என ஜோதிமணிக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.