Daily Horoscope
✕

தனுஷ் வரார்!.. தவெகவுக்கு பயம் வந்துடுச்சி!.. சேகர் பாபு பேட்டி...

Updated: சனி, 24 அக்டோபர் 2026 (08:49 IST)
விஜயை பின் தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற சில நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. இருவரும் தங்களின் ரசிகர்கள் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி வருகிறார்கள். இதில், தனுஷ் இன்னும் வேகமாக இருக்கிறார்.

ஏற்கனவே ரசிகர் மன்ற கூட்டத்தில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், டெல்லியில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், 2028ம் வருடம் தனுஷ் தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் எனவும் 2031 தேர்தலை அவர் குறி வைத்திருப்பதாகவும் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் டெல்லிக்கும் சென்று வந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மரிய வில்சன் ‘தனுஷெல்லாம் விஜய்க்கு போட்டியே கிடையாது.. யார் வந்தலும் ஒரே முதல்வர் விஜய் மட்டுமே. அவருக்கு யாரும் போட்டியில்லை’ என கூறியிருந்தார். இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ‘எப்போது பதில் சொல்ல தொடங்கிவிட்டார்களோ அப்போதே அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என அர்த்தம்’ என தெரிவித்தார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

புது நடிகர்கள் டெல்லிக்கு போறாங்க!.. ஒன்னும் நடக்காது - ஆதவ் அர்ஜுனா

இது ஒன்னும் புதுசுல்லயே!.. தனுஷ் அரசியலுக்கு வருவது பற்றி திருமா கருத்து!...

5 நிமிஷத்தில் விற்று தீர்ந்த iPhone Duo!.. பயணர்கள் அதிர்ச்சி...

AI Data Center அமைக்க 2 லட்சம் மரங்களை வெட்டிய Google!.. பின்லாந்தில் அதிர்ச்சி...

பசுமை தமிழகம் நோக்கி தமிழக அரசு: 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments