செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (14:48 IST)

தாமரை மலருமா? படர் தாமரை வேணும்னா மலரும்; தமிழிசையை வம்பிழுத்த சீமான்!

படர்தாமரை வேணும்னா மலரும் தமிழகத்தில் ஒருபோதும் தாமரை மலராது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலர வைத்தே தீருவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சபதம் எடுத்துள்ளார். 
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடி அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. கஜா புயல் ஏற்பட்டு இத்தனை நாள் ஆகியும் மக்களை சந்திக்காத மோடி, எதற்கு பிரதமராக இருக்க வேண்டும்.
 
இன்று மட்டுமல்ல எப்பொழுதும் தமிழகத்தில் தாமரை மலராது, வேண்டுமானால் படர் தாமரை மலரும் என தெரிவித்தார். இதற்கு தமிழிசை தரப்பிலிருந்து என்ன ரியாக்‌ஷன் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.