திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (08:36 IST)

விஜயகாந்துக்கு தமிழிசை வாழ்த்து! கூட்டணிக்கு அச்சாரமா?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, இரண்டாவது மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர்களும் சென்றுள்ளனர். ஒருசில வாரங்கள் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பின் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் நல்லபடியாக சிகிச்சை பெற்று நலமுடன் நாடு திரும்ப தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, 'தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக செய்திகள் மூலம் அறிந்தேன் சகோதரர் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று குணமடைந்து திரும்பி மக்கள் பணிதொடரவேண்டி உளமாற வேண்டி பிராரத்திக்கிறேன். அவரது பயணம் வெற்றிகரமாக அமையட்டும் என பாஜக வாழ்த்துகிறது' என்று கூறியுள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் இந்த கூட்டணியில் விஜயகாந்த் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, மோடி பிரதமராக பதவியேற்ற அன்று டெல்லி சென்று வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.