1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Director Ameer join in Kamal in MNM

கமல்ஹாசன் கட்சியில் இயக்குனர் அமீர்

அமீர்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது என்பதும் இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் செயற்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இயக்குனர் அமீர், கமல்ஹாசனின் கட்சியில் இணைந்தார். இது கட்சியில் இருந்த பலருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்த இயக்குனர் அமீர், இன்று திடீரென மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், கமல் கட்சிக்கு ஆலோசனை வழங்கவும், மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுக்கும்போது துணை நிற்கவும் இந்த கட்சியில் இணைந்ததாக கூறினார்.
 
அடுத்த கட்டுரையில்
ரூ.20,300 கோடி கடன்: திவாலான பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம்