புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2019 (12:18 IST)

இரண்டாவது ரிக் பழுதடைந்தது.. பழுது பார்க்கும் பணியில் தீவிரம்

சுர்ஜித்தை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்த இரண்டாவது ரிக், தற்போது பழுதடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

நள்ளிரவில் ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீடீரென இயந்திரம் பழுதானதை தொடர்ந்து, இரண்டாவது இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தோண்டும் பணியை ஆரம்பித்தனர். 

பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரமும் பழுதடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழுதை சரிபடுத்துவதற்கான வேளையில் தீவிரனாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.