வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (10:23 IST)

போர் போட்டா உப்பு தண்ணீதான் வரும்... ஆதள பாதாளத்தில் நிலத்தடி நீர்

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 7 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை மக்களின் குடிநீர் தேவை 80 கோடி லிட்டர் ஆகும். அனாஅல், அந்த அளவிற்கு சென்னையில் தண்ணீர் இல்லை. அதேபோல் நிலத்தடி நீரை பொருத்தவரை கடந்த 7 ஆண்டுகளில் முன்பு இருந்த நிலத்தடி நீர் மட்டம் இப்போது பெரிய அளவில் சரிந்துவிட்டது. 
 
பல்வேறு இடங்களில் 3 முதல் 4 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் சரிந்துவிட்டது என தகவல் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் பல இடங்களில் 200 அடி முதல் 400 அடிவரை சென்றுவிட்டது. 
 
இதன் விளைவாக கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. எனவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
அப்படி கடல் நீர் உட்புகுந்தால், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிடும். அதையே நாம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும்.