வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (09:30 IST)

தமிழகம் வந்தது காவிரி நீர்! விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் கடந்த சில வாரங்களாக நடந்து கொண்டிருந்த போதிலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தது தமிழக விவசாயிகள், தமிழக மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது 
 
காவிரி ஆற்றில் இருந்து கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீர் தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வந்தடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 8300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 4 ஆயிரத்து 800 கன அடியும், கபினி அணையில் இருந்து 3500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது
 
கர்நாடகா திறந்துள்ள இந்த தண்ணீர் தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வந்தடைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துள்ளதால் அம்மாநில அணைகளில் உள்ள நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்