வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (07:48 IST)

தொடர் மழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

schools
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
மேலும் அந்த பகுதியில் மழைநீர் பல இடங்களில் தேங்கி உள்ளதை அடுத்து உடனடியாக மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்