1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (11:36 IST)

2 மாவட்டங்கள் தவிர அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அலர்ட்! – காத்திருக்குது கனமழை!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் நாளை கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவின் கடலுண்டி, கல்லடா, மணிமலை, மீனச்சில் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவின் பெரும்பதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கேரளா மாவட்டங்களில், முக்கியமாக வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.