வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:49 IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

நாளை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும்  மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. எனவே,  நாளை,   நெல்லை மாவட்டம்  முழுவதும்  உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள மற்றும் அனைத்து மாநில அரசு  அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும்வகையில் வரும் ஜூலை 23 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.