கனமழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் அதீத மழை பொழிவின் காரணமாக இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கள் முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல மாதங்களுக்கு பிறகு அரசின் உத்தரவின் பெயரில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.