2023 - 24ஆம் ஆண்டில் பாஜக, காங்கிரஸ், திமுக பெற்ற நன்கொடைகள் எத்தனை கோடி? ஆச்சரிய தகவல்..!
2023 - 24ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவல்கள்
2023 - 24ஆம் ஆண்டில் பாஜகவுக்கு மட்டும் நன்கொடையாக ரூ. 2,244 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ. 79.9 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது
ப்ரூடெண்ட் எலெக்ட்ரோல் டிரஸ்ட் ரூ. 723.6 கோடி பாஜகவுக்கும் காங்கிரஸுக்கு ரூ. 156.4 கோடி நன்கொடை அளித்துள்ளது.
மேகா என்ஜினியரிங் மற்றி இன்ஃப்ரா லிமிடெட், சீரம் நிறுவனம், ஆர்செலர் மிட்டல் குழுமம் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ப்ரூடெண்ட்டுக்கு அதிக நன்கொடை அளித்தவர்கள்.
இந்தியாவின் 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், 2023-24ல் பாஜகவுக்கு ரூ.3 கோடி நன்கொடை அளித்துள்ளது.
தேர்தல் நன்கொடை மூலம் பாரதிய ராஷ்டிர சமிதி ரூ. 495.5 கோடி, திமுக ரூ. 60 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ. 121.5 கோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ரூ. 11.5 கோடி பெற்றுள்ளது.
ப்ரூடெண்ட் எலெக்ட்ரோல் டிரஸ்ட் பாரதிய ராஷ்டிர சமிதிக்கு ரூ. 85 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு ரூ. 62.5 கோடி, தெலங்கு தேசத்துக்கு ரூ. 33 கோடி நன்கொடை அளித்துள்ளது.
திமுகவுக்கு டிரம்ப் எலெக்ட்ரோல் டிரஸ்ட் மற்றும் ஜெயபாரத் டிரஸ்ட் ரூ. 8 கோடி அளித்துள்ளது.
Edited by Mahendran