வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (15:39 IST)

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை !

சென்னை தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதன்படி, தனியார் பள்ளிகளில் அதிகளவில் கூட்டம் சேருவது தவிர்க்கப்பட வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதோடு CEO-க்கள் தனியார் பள்ளிகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் செல்ல வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கேட்டுக்கொண்டுள்ளார்.