திங்கள், 12 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:43 IST)

சிலபஸ் குறைக்கப்படுமா? ஆலோசனையில் அன்பில் மகேஷ்!

சிலபஸ் குறைக்கப்படுமா? ஆலோசனையில் அன்பில் மகேஷ்!
தமிழக அரசு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 30 சதவீத பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசனை. 

 
சென்னை தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
 
அதோடு தமிழக அரசு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 30 சதவீத பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் துவங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.