வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (16:29 IST)

பள்ளிகளைத் திறக்க கோரிக்கை - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

விரைவில் பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தற்போது கொரொனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு முழுமையாகப் பாடங்களை நடத்த முடியவில்லை எனவும் விரைவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளார் டி.சி .இளங்கோ தெரிவித்துள்ளார்.