திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:09 IST)

ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம்: அமைச்சர் நாசர்

aavin
ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே ஆவினில் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவினில் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் ஆவின் பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம் மூலம் வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சத்துமாவு, குடிநீர் விற்பனை செய்யப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்