செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:35 IST)

விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

aavin
விரைவில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் நாசர்தெரிவித்துள்ளார். 
 
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளில் வாட்டர் பிளாண்ட் உள்ளது. எனவே விரைவில் ஆவின் நிறுவனம் குடிநீர் பாட்டில் தயாரிக்க உள்ளது என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
 
முதல்கட்டமாக அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆவின் நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்