வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (14:08 IST)

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

lok sabha
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளர் ஓம் பெரிய விழா இன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், ‘ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கருப்பு தினம் என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார் என்றும் பேசினார்.
 
எமர்ஜென்சி நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சபாநாயகர் ஓம் பிர்லா தொடர்ந்து, ‘எமர்ஜென்சியின் போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது  என்றும், எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்றும் கூறினார்.
 
இதனையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து குடியரசு தலைவர் உரைக்காக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
Edited by Mahendran