வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (07:49 IST)

சசிகலா ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வார்: நமது எம்ஜிஆர் நாளேடு தகவல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சசிகலா பிரச்சாரம் செய்வார் என நமது எம்ஜிஆர் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
 
சசிகலா ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வார்; அவரது அரசியல் பயணத்தில் எந்த தடையும் இல்லை. சசிகலா எழுச்சியை நசுக்க நச்சு கும்பல் ஒன்று சதிவலைகளை பின்னியிருக்கிறது ; ஆனால் அதனை கண்டு அஞ்சமாட்டார்
 
சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டும் என நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்துகின்றனர் என நமது எம்.ஜி.ஆர் ஏடு எழுதியிருக்கிறது - இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே எழுதிக்கொண்டிருப்பார்கள்? தொகுதி பங்கீடே அதிமுக செய்ய தொடங்கிவிட்டது