புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (16:44 IST)

பாரதிராஜா மேல் கோபத்தில் கங்கை அமரன்… காரணம் அந்த சந்திப்பா?

இயக்குனர் பாரதிராஜாவும் கங்கை அமரனும் நீண்டகால நண்பர்கள் என்பது திரையுலகம் அறிந்த விஷயம்.

சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்துக்கு முன்னதாகவே பாரதிராஜாவும் இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களும் நண்பர்கள். சென்னையில் ஒன்றாக சினிமா வாய்ப்பு தேடிய போது ஒரே அறையில் தங்கி வசித்தவர்கள். அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. அதிலும் பாரதிராஜாவும் கங்கை அமரனும் இப்போதும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது பாரதிராஜா மேல் வருத்தத்தில் இருக்கிறாராம் கங்கை அமரன். அதற்குக் காரணம் சமீபத்தில் பாரதிராஜா சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை சென்று சந்தித்து அவரை வீரத்தமிழச்சி என்று புகழ்ந்ததுதான் காரணமாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக அவர் புகார் கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்க்கை வரலாறான பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் புத்தகத்திலும் பதிவு செய்திருந்தார். அதெல்லாம் தெரிந்தும் பாரதிராஜா இப்படி சசிகலாவை புகழ்கிறாரே என்று வருத்தத்தில் உள்ளாராம்.