செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (19:50 IST)

சசிகலாவுக்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை: கார்த்திக் சிதம்பரம்

சசிகலா சிறையில் இருந்தாலும் விடுதலையாகி வெளியே வந்தாலும் அவருக்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை என சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வரும் தேர்தலிலும் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் அதிமுக திமுக தவிர புதிய கூட்டணியை சசிகலா உருவாகி வருவதாகவும் அந்த கூட்டணி தான் நம்பர் ஒன் கூட்டணி என்றும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலா ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே இருந்தாலும் அவருக்கு யாரும் ஓட்டுப் போட தயாராக இல்லை என்று திண்டுக்கல்லில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்
 
மேலும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் அதிமுக மிக விரைவில் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கார்த்திக் சிதம்பரத்தின் இந்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது