Daily Horoscope
✕

TVK Vijay: விஜயை நான் அரசியல்வாதியாவே பார்க்கல!.. நாட்டாமை நக்கல்!...

Written By BALA
Updated: திங்கள், 22 டிசம்பர் 2025 (18:24 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். கடந்த பல மாதங்களாகவே தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். விழுப்புரம் மற்றும் மதுரையில் இரண்டு மாநாடுகளை நடத்தினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால் கரூர் சம்பவம் விஜயின் அரசியல் நடவடிக்கைகளை இரண்டு மாதங்களாக முடக்கிப்போட்டது.

தற்போது மீண்டும் அரசியல்களத்தில் கலக்கத் துவங்கி விட்டார் விஜய். புதுச்சேரியை தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக மிகவும் ஆவேசமாக பேசியிருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் திமுகவை தீய சக்தி என விமர்சித்திருக்கிறார் விஜய்.

மேலும் களத்தில் இருப்பவரை மட்டுமே எதிர்ப்போம்.. மற்றவர்களை பற்றி இப்போது பேசப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் இது பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு அவர் கொடுத்த பதிலாகவே பார்க்கப்படுகிறது. இந்ந்நிலையில் விஜயின் அரசியல் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் ‘பாஜகவில் என்னுடைய பயணம் நன்றாக இருக்கிறது நடிகர் விஜய் ஒரு அரசியல்வாதி அல்ல.. அவர் ஒரு நடிகர் மட்டும்தான். ஏனெனில் அவரது கட்சியின் கொள்கை, கோட்பாடு எதுவும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

என்னைப் போல விஜய் பத்திரிகையாளர்களிடம் பேச வேண்டும். ஆனால் இதுவரை அவர் பேசவில்லை தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என விஜய் பேசியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் 10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் இருக்கிறது. வீடு கட்டி கொடுப்பதற்கு என்ன வழி வகை என்ன என்பதை விஜய் விளக்கவேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.<>

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments