எம்.எல்.ஏ விஜயதாரனி பா.ஜ.கவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது! - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்!
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி:
சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்திக்கையில் செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
இ.வி.எம்.மிசின் மீது நம்பிக்கை வர அனைத்து வி.வி.பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என்றும் என்னை பொருத்தமட்டில் இ.வி.எம் மெசினில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. எனவுன் மற்றவர்களுக்கு வேறு கருத்து உள்ளது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். என்றும் தெரிவித்ததுடன் கார்கே அவர்கள் தமிழ்க காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்திருப்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என்றும் என்னுடைய முழு ஒத்துழைப்பு அவருக்கு இருக்கும் என்பதை அவரிடமே நேரடியாகவே கூறிவிட்டேன். எனவும் தெரிவித்ததோடு தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டனி 39 இடங்களிலும் வெற்றிபெறப்போகிறது. எனவும் எங்களை நாடாளுமன்றத்தில் பேசவிட்டால்தான் மக்களின் பிரச்சனைகளை பேச முடியும்? இவர்களின் ஒரே சாதனை எங்களுடைய 146 எம்.பிக்களை ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்ததே” என பேசினார்
மேலும் விஜயதாரனி பா.ஜ.க சென்றது குறித்த கேள்விக்கு
காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் சென்றாலும் வருத்தமளிக்கிறது. எனவும் 3 முறை எங்களது கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரனி பா.ஜ.கவிற்கு சென்றது எனக்கு வருத்தமளிக்கிறது என்றும் ஆனால் இடை தேர்தலில் அந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் தான் வெற்றி பெரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. எனவும் பேசியதுடன் தமிழகத்தில் பா.ஜ.க ஒரு முன்னனி அரசியல் கட்சி கிடையாது. அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடையாது. என்றும் இந்த தேர்தலிலேயே அவர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை தமிழக மக்கள் வெளிச்சம்போட்டு காட்டிவிடுவார்கள். எனவும் கூறியதுடன் தமிழ்நாட்டு வரிப்பனத்தை தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கும்போது அதனை நிராகரிக்கும் அரசு பி.ஜே.பி அரசு அதனால் அதனை நிராகரிக்க வேண்டும் என்கிற மனநிலையில்தான் தமிழக மக்கள் உள்ளனர்" எனவும் பேட்டியளித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் காஙகிரஸ் கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.