வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:01 IST)

மக்களவை தேர்தலில், புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும்"

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் கூட்டணி குறித்து பாஜகவினர்  பேசி வருகின்றனர். பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏ.சி.சண்முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டின் படி புதிய நீதி கட்சி தாமரை சின்னத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் பாஜக மற்றும் புதிய நீதி கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தான் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக புதிய நீதி கட்சி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பாஜகவினர் பேசி இருந்தனர். அடுத்ததாக தமிழருவி மணியன், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Edited by Siva