புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:39 IST)

விஜயதாரிணிக்கு பின் அடுத்த விக்கெட்.. இன்று மாலை தெரியும்.. அண்ணாமலை அறிவிப்பு..

சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி திடீரென பாஜகவில் இணைந்த நிலையில் இன்று மாலை கோவையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இன்னொரு விக்கெட் விழப்போகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளதை அடுத்து பாஜகவில் சேர போகும் அந்த இன்னொரு பிரபலம் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஒவ்வொரு தேர்தல் நடைபெறும் போதும் ஒரு கட்சியில் இருக்கும் பிரமுகர் இன்னொரு கட்சியில் இணைந்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் நடைபெறும் கூட்டத்தின் போது விஜயதாரணிக்கு பிறகு இன்னொரு விக்கெட் விழப்போகிறது என்றும் அவர் யார் என்பதை இன்று மாலை வரை பொறுத்து இருந்து பாருங்கள் என்றும் கூறியுள்ளார்

பாஜகவில் இணையும் அந்த பிரபலம் யாராக இருக்கும் என்று பேசப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை மாபா பாண்டியராஜன் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva