ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (15:34 IST)

பாஜகவுடன் கூட்டணி.. இன்று ஜி.கே.வாசனுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

gk vasan
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை இன்று ஜிகே வாசனுடன் பாஜக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 
 
பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் என்பவர் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இடம் பெறும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் கூட்டணி குறித்தும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரபூர்வமாக இரு கட்சி பிரமுகர்களும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Siva