எடப்பாடிக்கு சிபிஐ மீது திடீரென நம்பிக்கை வந்தது எப்படி? - ஆர்.எஸ்.பாரதி!
எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென சிபிஐ மீது நம்பிக்கை வந்தது எப்படி என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர் மீது நான் தொடுத்த டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோது அதற்கு உச்சநீதிமன்றம் சென்று அவர் தடைபெற்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலமைச்சராக இருந்தபோதே சிபிஐ மீது இல்லாத நம்பிக்கை தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடிக்கு எப்படி நம்பிக்கை வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் இதுபோன்று நடக்கவில்லை என்பது போல் கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் நடத்தி வருகிறார்
விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கலாம் என்று முதலமைச்சர் கூறியபோதும் அதிமுக அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் பாரதி கூறியுள்ளார்.
Edited by Siva