ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜூன் 2024 (12:13 IST)

அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி சோனியா காந்தி ஆர்ப்பாட்டம்.. இந்தியா கூட்டணி அதிரடி..!

நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய அரசியல் சாசனத்தை கையில் ஏந்திய படி சோனியா காந்தி உள்பட இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும், சர்வாதிகாரம் ஒழிய வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் கோஷம் என்பது அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று இருந்தது என்பதும் ராகுல் காந்தியின் ஒவ்வொரு கூட்டத்திலும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு ஆதரவளியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார் என்பது தெரிந்தது. 
 
மேலும் அரசியல் சாசனம் குறித்த பாக்கெட் அளவு புத்தகத்தையும் அவர் விழிப்புணர்வு செய்தார் என்பதும் அவரது பேச்சுக்கு பின்னர் தான் அரசியல் சாசனம் புத்தகம் அதிக விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பதினெட்டாவது மக்களவை கூட்டம் தொடங்கிய நிலையில் இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் திடீரென பாராளுமன்றத்தில் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran