1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (13:03 IST)

ஜெயம் ரவியின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய ஆர்த்தி.. விவாகரத்து கன்பர்மா?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்று ஆர்த்தி திடீரென தனது இன்ஸ்டாகிராமில் உள்ள ஜெயம் ரவியின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரை உலகில் கடந்த சில ஆண்டுகளில் தனுஷ் - ஐஸ்வர்யா,  ஜிவி பிரகாஷ் - சைந்தவி உள்பட பல விவாகரத்து நடந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்திகள் பரவி வருகிறது. 
 
இந்த செய்திகளுக்கு இதுவரை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருமே எந்த பதிலும் சொல்லாமல் இருக்கும் நிலையில் திடீரென ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஜெயம் ரவியின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனால் இருவரும் விவாகரத்து கன்பார்ம் செய்யப்பட்டதாக ரசிகர்களுக்கு தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து ஜெயம் ரவி ஆர்த்தி ஆகிய இருவருமே விளக்கம் அளித்தால் மட்டுமே வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran