வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (13:45 IST)

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்.! நாளை ஆளுநரை சந்திக்கிறது அதிமுக குழு..!!

Edapadi
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக குழு நாளை சந்திக்க இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து  கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
 
அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையைக் கையாளுகிறார் என தெரிவித்த அவர், மருந்து விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தன்னை கிண்டல் செய்கிறார் என்றும்  ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
 
கள்ளச்சாராய மரணம் தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் கள்ளச்குறிச்சி சம்பவத்தில் தனி நபர் ஆணையம் மூலம் நீதி கிடைக்காது என்றும் கூறினார். 


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக குழு நாளை சந்திக்க இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.