ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்- உயர்கல்வித்துறை தகவல்
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், உதவித்தொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது அவசியம் எனவும், மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவர் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.