திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (17:03 IST)

நடுவானில் மயக்கம் அடைந்த விமானி...பயணி செய்த துணிச்சல் செயல் !

Flight
அமெரிக்காவின் புளோரிடாவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானம்  நடுவானில் பறந்தபோது, பைலட் மயங்கினார். இதையடுத்து, எந்தவித முன் அனுபமும் இல்லாத ஒரு பயணி அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

வட அமெரிக்காவின்ன் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு பஹாமா.  இங்கிருந்து, சிறிய ரக விமானம் இன்று அமெரிக்காவில் உள்ள புளோரிடா  பகுதிக்கு 2 பயணிகளுக்குடம் சென்றது.

விமானம்  நடுவானில் பறந்தபோது, விமானத்தின் பைலட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் திடீரென்று மயக்கம் அடைந்தார்.

இதைப் பார்த்து அதிர்ந்து அடைந்த பயணி ஒருவர் விமானி அறையில் இருந்து கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தார்.

 அப்போது, கட்டுப்பாடு அறையில் இருந்த அதிகாரி விமானத்தை எப்படி இயக்குவது என்று கூறினார். அதைக்கேட்டு, அதேபோல் விமானத்தை பத்திரமாக தரையிறகினார் பயணி. அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தப் பயணி புளோரிடாவில் உள்ள  தனது கர்ப்பிணி மனைவியைப் பார்க்க விமானத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.