1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (16:34 IST)

வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

bus nameboard
வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் வழிகாட்டி பலகை வந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதாகவும், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
சென்னை கத்திப்பாரா அருகே ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே வழிகாட்டி பலகை மீது திடீரென பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது
 
இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவர் பலியானதாகவும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
மாநகர பேருந்து மோதிய வேகத்தில் தான் வழிகாட்டி பலகை கீழே விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் வழிகாட்டி பலகை கீழே விழுந்ததால், மாநகரப் பேருந்து வேன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது