செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (14:13 IST)

திருப்பூர் அருகே கார் மீது பேருந்து மோதி விபத்து...3 பேர் பலி

accident
திருப்பூர் அருகே கார் மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொடுவாய் அருகேயுள்ள காக்கா பள்ளம் என்ற பகுதியில் இருந்து, திருப்பூர் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. 

அப்போது, அதே சாலையில் எதிர்ப்புறம் ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலுயிரிழந்தார்.  மேலும் 2 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.