வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (15:43 IST)

பிரபல நடிகை சென்ற கார் விபத்து: தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

ani hes
பிரபல நடிகை சென்ற கார் விபத்து: தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!
அமெரிக்காவில் பிரபல நடிகை சென்ற கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே தீப்பிடித்ததால் காரில் இருந்த நடிகை ஆனி ஹெச் என்பவர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
அமெரிக்காவில் பல்வேறு விருதுகளை வென்ற நடிகை ஆனி ஹெச் இவர் நேற்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு வீட்டின் மீது மோதி பிடிக்கத் தொடங்கியது
 
இதனை அடுத்து காருக்குள் இருந்த நடிகை ஆனி ஹெச்சை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து போலீசார் அமெரிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்