செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (23:48 IST)

உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்க வேண்டும்- விஜயகாந்த்

மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டுமென விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசுப் பள்ளியை சேர்ந்த 4  மாணவிகள் கதவணை பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது காவிரி ஆற்றில் இனியா, லாவண்யா, சோபிகா, தமிழரசி ஆகிய நான்கு மாணவிகள் நீரில் மூழ்கியுள்ளனர்.

4 மாணவிகளின் சடலம் மீட்கப்பட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மாணவிகளை காக்க தவறியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்ச உயர்த்தி வழங்க வேண்டுமென விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேர்ந்த மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

4 மாணவிகள் உயிரிழந்திருப்பது ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணமாணவிகள் ஆற்றில் இறங்குவதை தடுக்காமல் அலட்சியமாக செயல்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிள்ளைகளை இழந்து பெற்றோர்கள் கதறுவதை பார்த்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் அரசு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது. ஒவ்வொரு மாணவியின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும்’’ என்ன்று தெரிவித்துள்ளார்