1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (20:26 IST)

என்னை நடிகனாக மக்கள் பார்க்க வேண்டும்: தூத்துகுடி செல்லும் முன் ரஜினி பேட்டி

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்த்குடி செல்லவுள்ளார். இதனையடுத்து சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது தூத்துகுடி மக்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியினால் மிகவும் மனக்கவலையில் உள்ளனர். அவர்கள் என்னை ஒரு நடிகனாக பார்த்தால் அவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும், எனக்கும் சந்தோஷம் கிடைக்கும் அதற்காகவே தூத்துகுடி செல்கிறேன் என்று கூறினார்.
 
மேலும் தூத்துகுடி கலவரத்திற்கு திமுக தான் காரணம் என தமிழக முதல்வர் கூறியிருப்பது முழுக்க முழுக்க அரசியல். இவர்கள் அவர்களை குறை கூறுவதும், அவர்கள் இவர்களை குறை கூறுவதும் அரசியல் வாடிக்கையாக உள்ளது. சிங்கம் அவ்வப்போது பின்னால் பார்த்து கொண்டே செல்லும். ஆனால் பின்னால் மட்டுமே பார்த்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று கூறினார்
 
மேலும் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டு குறித்த செய்தியை பார்த்தேன். கர்நாடக திரைப்பட சங்கம் இதற்கு ஒரு நல்ல தீர்வு தருவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
 
மேலும் பிரதமர் இதுவரை தூத்துகுடி துப்பாக்கி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காதது குறித்து மீடியாவான நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
 
இவ்வாறு ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்