நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூற நாளை காலை 8 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூற நாளை காலை 8 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார்.
தனது அரசியல் வருகை குறித்த அறிவுப்பு பின்னர் முதன்முறையாக மக்கள் பிரச்சனைக்காக களமிறங்குகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு மறுநாள் வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தனர்.
அப்போது தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு இருந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 144 தடையை நீக்கிய பின் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்தார்.
பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ் சென்று சந்தித்தார். தற்போது ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.