1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 மே 2018 (18:04 IST)

சென்னை ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சினிமா பைனான்சியர் முகுந்தன் போத்ரா என்பவர் தொடுத்த வழக்கு ஒன்றில்  ஜூன் 6இல் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று ரஜினிகாந்த் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த மனுவில் சினிமா பைனான்சியர் முகுந்தன் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. 
 
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கஸ்தூரி ராஜாவுடன் ரஜினிகாந்தும் சேர்ந்து மோசடி செய்ததாக போத்ரா வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த்  ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் இதனால்  ரஜினி மீது போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரஜினி மனுதாக்கல் செய்துள்ளார்.