புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (08:05 IST)

ரஜினிகாந்த் பெங்களூர் சென்றது ஏன்? புகைப்படங்களுடன் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார் 
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் திடீரென பெங்களூரு சென்றார். அவர் ஓய்வு எடுப்பதற்காக செல்வதாகவும் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக செல்வதாகவும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக செல்வதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன
 
ரஜினிகாந்த் பெங்களூர் சென்றது ஏன்?
ஆனால் உண்மையில் அவர் சென்றது பெங்களூரில் உள்ள தனது அண்ணனிடம் ஆசிர்வாதம் வாங்கவே என்பது தற்போது புகைப் படங்களுடன் கூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக தனது மூத்த சகோதரர் சத்தியநாராயணா அவர்களிடம் நேற்று பெங்களூரில் ரஜினிகாந்த் ஆசி பெற்றார். அவர் தனது அண்ணனின் காலில் விழுந்து ஆசி பெறும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
 
மேலும் ரஜினிகாந்த் பெங்களூரில் சில ஒரு சில நாட்கள் தங்கியிருப்பார் என்றும் பிறந்த நாளையும் அங்கேயே கொண்டாடுவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன