திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:03 IST)

ரஜினி பாஜகவோட ஜெராக்ஸ்தான்; கமல் மேலதான் டவுட்டு! – திருமாவளவன்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு பாஜகவின் அழுத்தம்தான் காரணம் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை ஜனவரியில் தொடங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்புக்கு பலர் வரவேற்பு அளித்து வரும் அதேசமயம் பலர் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் ”உடல்நிலை சரியில்லை என கட்சி தொடங்குவது குறித்து யோசித்த நடிகர் ரஜினிகாந்த், பாஜக, ஆர்.எஸ்.எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். ரஜினியும் பாஜகவின் முகமே” என கூறியுள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் கமல் ஆதரிப்பது ஏன் எனவும் புரியவில்லை என கூறியுள்ளார்.