ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:59 IST)

ரஜினி கட்சியுடன் கமல் கட்சி கூட்டணியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தபின் தனது ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் 
 
தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகிய இருவரும் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி கட்சியுடன் கூட்டணி வைக்க கமல்ஹாசன் கட்சி தீவிரமாக முயற்சி செய்திருப்பதாகவும் இது தொடர்பாக ரஜினி கமல் ஆகிய இருவரும் அடுத்த மாதம் சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது 
 
ஆனால் ரஜினி கட்சி ஏற்கனவே தெளிவாக தான் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் 234 தொகுதிகளிலும் தாங்கள் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கமல்ஹாசன் அவர்கள் தனது கூட்டணியில் யார் இணைந்தாலும் கமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளதால் இரு கட்சிகளும் கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை என்பது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்