ரஜினி கட்சியில் 60 மாவட்ட செயலாளர்கள்: அர்ஜூனா மூர்த்திக்கு கூடுதல் அதிகாரம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் என்பதும் டிசம்பர் 31ஆம் தேதி அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார்
மேலும் தனது அரசியல் கட்சி குறித்த பணிகளை கவனிப்பதற்காக தமிழருவிமணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகிய இருவரையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் தற்போது 36 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால் ரஜினி மக்கள் மன்றம் கட்சியாக அது மாறியபின் 60 மாவட்ட செயலாளர்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் இதே போல் மாவட்ட செயலாளர்களை அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 60 மாவட்ட செயலாளர்களை பிரித்து அந்தந்த மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமிக்க அர்ஜுனா மூர்த்திக்கு ரஜினிகாந்த் அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன