வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (20:26 IST)

வரும் தேர்தலில் ரஜினி-விஜய் எதிரெதிர் அணியில் மோதலா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வரும் தேர்தலில் கோலிவுட் நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமலஹாசன் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து களத்தில் இறங்கி விட்ட நிலையில், விரைவில் ரஜினியும் கட்சி தொடகுங்கும் தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் விஜய்யையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது, அவர் அரசியலுக்கு வருவதை பச்சைக்கொடி காட்டிவிட்டதை காட்டுவதாக் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முக ஸ்டாலினை விஜய் சந்தித்ததும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதிமுக மற்றும் பாஜக ஆதரவு நிலையை எடுப்பார் என்றே கருதப்படுகிறது. இதனால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதனை சரிக்கட்ட விஜய் போன்ற பெரிய நடிகர்களை கட்சியில் இணைக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கணிப்பு உண்மையாக இருந்தால் ரஜினியும் விஜய்யும் எதிர் எதிர் துருவங்களில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் திமுக உடன் விஜய் இணைய சில தயக்கங்களும் உள்ளன. உதாரணமாக ‘சுறா’ படத்தின் ரிலீசின்போது விஜய்யை திமுக் படுத்திய பாடு, கத்தி படத்தில் இடம்பெற்ற 2ஜி வசனத்திற்கு திமுக தெரிவித்த எதிர்ப்பு ஆகியவைகளை விஜய் இன்னும் மறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் விஜய்யை  சமாதானப்படுத்தி திமுகவில் இணைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுவதால் வரும் தேர்தலில் நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பது உறுதி என்றே தெரிகிறது